ஆசைதான் காதலனே

ஆசைதான் காதலனே! என்றும்
அழியாத உன்அன்பில் திளைக்க
ஆசைதான் காதலனே! அழியாத
இவுலகில் நான்மட்டும் உன்னில்அழிய
ஆசைதான் காதலனே! ஊருரங்கும்
நேரத்தில் உனதருகில் நானிருக்க
ஆசைதான் காதலனே! உறவாய்
இருக்கும் நீ உயிராய் மாற!
ஆசைதான் காதலனே! உன்மயக்கும்
கண்ணில் என்மாய பிம்பம் தோன்ற !
ஆசைதான் காதலனே! உன்பத்து
விரல்களில் பாதிவிரல் நானாய்மாற!
ஆசைதான் காதலனே! உன்கால்
பதியும் இடத்தில் கல்லாய் மாற !
ஆசைதான் காதலனே! நான் அறியும்
முதல்மொழி உன்பெயராய் இருக்க!
ஆசைதான் காதலனே! உச்சரிக்கும்
வார்த்தைகள் உனக்காய் மாற!
ஆசைதான் காதலனே! உன் சோகம்
சுமக்கும் கண்ணீராய் மாற!
ஆசைதான் காதலனே! உன் தாயினும்
பெரிதாய் என்அன்பில் உன்னைசுமக்க!
ஆசைதான் காதலனே! அனைத்தும்
உன்னில் அறிந்து ஆருயிராய்மாற!
ஆசைதான் காதலனே! அன்புக்கு
மயங்கும் நீ ஆல்கஹாலை வெறுக்க!
ஆசைதான் காதலனே ! அரைநொடியேனும்
நீ என் கணவனாய்மாற!
ஆசைதான் காதலனே ! கனவுகள்
கட்சியாய் மாற, கனவு நீயாய் மாற.........!