கண்ணீரில் நனையும் நந்தவனம் 555

கண்ணீரில் நனையும் நந்தவனம் 555

பிரியமானவளே...


உயிரென
உடலென நேசித்து...

நீயின்றி நான் இல்லையென
சுவாசித்து...

புன்னகையோடு
கைகுளுக்குகிறாய்...

இனி எப்போதும் நாம்
பார்க்க வேண்டாம் என்று...

பிரிந்து செல்லும் போது
நினைவு பரிசு கொடுப்பார்கள்...

நான் கொடுக்க என்னிடம்
ஏதும் இல்லை...

"""இதயம் கூட"""

நீ கொடுத்தாய் உன் நினைவுகளையே
பரிசாக எனக்கு...

நீ உறங்கும் போது
கனவாக...

சுவாசிக்கும் போது
மூச்சாக...

எங்கு சென்றாலும் உன்
நிழலாக தொடர்வேன்...

உன் சுவாசம்
இருக்கும் வரை...

கார்மேகமும் பொழியவில்லை
பூமியும் நனையவில்லை...

நான் மட்டும்
நனைகிறேனடி...

உன்னை நினைத்து
தினம் கண்ணீரில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Aug-14, 3:20 pm)
பார்வை : 248

மேலே