ஓவியப் பெண்-----அஹமது அலி-------

........ஓவியத்தின் மீதென்ன காயம்
ஓவியக்காயமாய் சினம் பாயும்
........காவியச் சுவை தேனாய் ஊறும்
மேவிய அழகினில் ரசனை மேயும்!


........மொய்குழல் கோதி முகம் மலரும்
மைவிழி மோதி அகம் அல(ரு)றும்
.........பொய்மொழி பேச இதழ் உருகும்
மெய்யொளி வீசி உயிரும் சுடரும்!


.........கை வளையோசை காற்றில் சிதறும்
கால் கொலுசோசை காதை சினுக்கும்
........மேலாடை அசைவில் மேனி சிலிர்க்கும்
பாலாடை போல் பசலை திரளும்!


......மூச்சுக் காற்றில் சுகந்தம் பரவும்
மூக்குத் துளைகள் குழல்களாய் மருவும்!
.......மூங்கில் காடாய் பற்றி எரியும்
மூர்ச்சை நிலையில் சொர்க்கம் தெரியும்!



......பாதச் சுவடுகள் சித்திரம் பழகும்
பாவை நிழலதும் வண்ணம் ஒளிரும்
......பாவலன் தூவி மலர்களை தூவும்
பாட்டில் ஏற்றி கவிமாலை சூடும்!



ஓவியக்காயம்=புலி

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (13-Aug-14, 7:55 am)
பார்வை : 246

மேலே