வருங்காலம்

பிஞ்சு பாதங்கள்
மண்ணில் மறைய
உடுத்தும் உடைக்கும்
உண்ணும் உணவும்
இல்லையெனினும்
நாளையப் பாரதம்
நம்பிக்கையுடன் நடைப்போட
வறுமைக்கு வறுமை வர
ஊழல்கள் இல்லா
அரசு அமைய
பசுமைப் போர்வையில்
பாரதம் கட்டுண்டிட
பாரிலே நல்லரசாய்
பாரதம் வல்லரசாய்
நாடே இருளில் மூழ்கினாலும்
அறிவுச்சுடர் ஏந்தி நடந்து
பாரதம் காக்க
பட்டொளி வீசும் கொடியுடன்
புறப்பட்டு விட்டான்.

எழுதியவர் : (14-Aug-14, 7:01 pm)
Tanglish : varunkaalam
பார்வை : 199

மேலே