முக புத்தகம் face book
'
'
'ஆணிங்கு பெண்ணாக
பெண்ணிங்கு ஆணாக
ஆசை தீர்க்கும் வடிகால்
தினம் கரையும் அரைநாள்
அன்னையை கேட்காத கேள்வி
இங்கு அனைவரிடம் கேட்போம்
நான் நலம் நீ நலமா என
முகமும் முகவரியும் தெரியாமல்
நிராசைகள் நிறைவேற்றப்படும்
அழகில்லாதவன் மன்மதனை இங்கு
நடிகன் நடிகை முகம் கொண்டு
அவர் பிம்பமாய் வாழலாம்
எல்லோர் கனவும் எல்லோர்க்கும்
மனதின் வடிகாலாய்
குருரத்தின் வெளிப்பாடாய்
காம மிருகமும் நடமாடும்
மனித காட்சி சாலை ...
தெய்வ குணமும் காண
தேவதையுடன் பழக
கனவுகள் மெய்பட
தெரிந்தவை பகிர
தெரியாததை கற்றுக்கொள்ள
நடப்பவை தெரிந்து கொள்ள
அனுபவம் முதல் பாடம்
அனுதினமும் இங்கே அரங்கேறும்