இருக்கும் ஆனா இருக்காது
முட்டை என்றால் கரு இருக்கும்
முகம் என்றால் பரு இருக்கும்
காதல் என்றால் வலி இருக்கும்
இருந்தாலும் சுகமாகவே இருக்கும்
-------------------------------------------------------------
விழிகள் என்றால் பார்வை இருக்கும்
விரல்கள் என்றால் நகம் இருக்கும்
தூக்கம் என்றால் கனவுகள் இருக்கும்
அதுவும் சுகமாகவே இருக்கும்
--------------------------------------------------------------
தாய் என்றால் பாசம் இருக்கும்
தந்தை என்றால் பரிவு இருக்கும்
அவளின் பார்வை என்றால் அவஸ்தை இருக்கும்
ஆனாலும் அழகாகவே இருக்கும்
-----------------------------------------------------------------
பகல் என்றால் சூரியன் இருக்கும்
பால் நிலவு தான் இரவில் இருக்கும்
கன்னியின் பேச்சு கவிதையாய் இருக்கும்
கேட்பதற்கு அருமையாகவே இருக்கும்
--------------------------------------------------------------------
இந்தியா என்றால் ஒற்றுமை இருக்கும்
இரவில் எல்லோருக்கும் உறக்கம் இருக்கும்
அவளின் இதழ்கள் என்றால் சிவந்து இருக்கும்
பார்பதற்கு இனிமையாகவே இருக்கும்
---------------------------------------------------------------------------
கோவில் என்றால் தெய்வம் இருக்கும்
கோரிக்கைகள் நிறைய இருக்கும்
அதில் என் காதலும் ஒன்றாக சேர்ந்திருக்கும்
என்னிடம் கடவுளின் அருளும் இருக்கும்
-------------------------------------------------------------------------------
தொடக்கம் என்றால் முடிவு இருக்கும்
துன்பம் என்றால் இன்பம் இருக்கும்
நட்பு என்றால் மகிழ்ச்சி இருக்கும்
எப்பொழுதும் துணையாகவே இருக்கும்
------------------------------------------------------------------------
மேகம் என்றால் மழை இருக்கும்
வானம் என்றால் பறந்து விரிந்திருக்கும்
நீ இல்லை என்றால் என் உடல் இருக்கும்
உண்மையில் உயிர் இருக்காது !!!
-------------------------------------------------------------------------
இனியாவது சொல்லிவிடு
என் காதலை ஏற்று விடு
ஆம் என்றால் உயிர் வாழ்வேன்
இல்லை என்றால் எங்கு போவேன் ???
-------------------------------------------------------------------------------
கண்ட உடன் வந்த காதல் இல்லை
கண்மணி உன்னை என் உயிர் பிரியவில்லை
என்றென்றும் என் நெஞ்சில் வாழும் என்னவளே !
என்னுயிர் ஆனவளே !!
எங்கும் நிறைந்தவளே !!!
-ரசிகன்