விலகிவிடு கருவிழி கண்மணியே

என்
கண்ணில் இருக்கும் ...
கருவிழியே கண்மணியே ....
என்னவளின் இடத்தை ..
பிடித்த என் கண்ணின்
கருவிழியே ....!!!

எனக்கொரு
உதவிசெய் கருவிழியே....!
என்னவளை
கருவிழியாக்கபோகிறேன்
என் கண்ணில் இருந்து
விலகிவிடு கருவிழி
கண்மணியே ...!!!


திருக்குறள் : 1123
+
காதற்சிறப்புரைத்தல்
+
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 43

எழுதியவர் : கே இனியவன் (14-Aug-14, 8:55 pm)
பார்வை : 130

மேலே