சடலமானேன் உயிரே

என்னவளும் நானும் ...
எம்மை மறந்து இணையும்
தருணத்தில் -என் உடலுக்கு
உயிராவாள் என் உடல் உயிரை
உணரும் ....!!!

என்னவளே நீ என்னை
விலகும் போது என் உடலில்
உயிர் பிரியும் உணர்வடி ...
நீ என்னை பிரியும் போது
சடலமானேன் உயிரே ...!!!


திருக்குறள் : 1124
+
காதற்சிறப்புரைத்தல்
+
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 44

எழுதியவர் : கே இனியவன் (14-Aug-14, 9:11 pm)
பார்வை : 66

மேலே