புயலுக்கு பூ கொடுத்தேன் - இராஜ்குமார்

கடல்மிதைவையை மிதித்து
கண்ணால் மிரட்டி
மூழ்க சொன்னேன்
மூச்சு காற்றில் ..!!

மீன்களை பிடித்து
மீசைகள் கிழித்து
மிதக்க சொன்னேன்
இதழின் அசைவில் ..!!

சுழலினை முட்டி
பற்களால் கடித்து
பறக்க வைத்தேன்
இதய உணர்வில் ..!!

துறைமுகத்தை தூக்கிலிட்டு
கப்பலை கடத்தி
விண்ணில் வீசினேன்
விழியின் ரசனையில் ..!!

படகினை அழைத்து
பார்வையால் சிதைத்து
அலையில் துவைத்தேன்
கவிதை தாளில் ..!!

கரையினை இழுத்து
விழிநீரில் கரைத்து
திகட்ட வைத்தேன்
எழுத்தின் வடிவில் ..!!

வானிலையை வழிமறித்து
வார்த்தையால் உடைத்து
புயலுக்கு பூ கொடுத்தேன்
கற்பனை தேடலில் ..!!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (15-Aug-14, 4:43 am)
பார்வை : 679

மேலே