இடைத் தேடி இளைத்துப் போகுது - இராஜ்குமார்
காலுக்கு என்ன கணக்கோ
உன் - பாதம் தேடி
தேய்ந்துப் போகுது ..!!
விரலுக்கு என்ன விருப்பமோ
உன் - கன்னம் தேடி
களைத்துப் போகுது
இதழுக்கு என்ன இன்பமோ
உன் - புன்னகை தேடி
புதைந்துப் போகுது ..!!
விழிக்கு என்ன தேடலோ
உன் - முகம் தேடி
மூழ்கிப் போகுது ..!!
மனதிற்கு என்ன மயக்கமோ
உன் - குணம் தேடி
குலைந்துப் போகுது ..!!
நிழலுக்கு என்ன பழக்கமோ
உன் - தேகம் தேடி
தோற்றுப் போகுது ..!!
கவிக்கு என்ன கற்பனையோ
உன் - காதல் தேடி
சிலிர்த்துப் போகுது ..!!
இமைக்கு என்ன ஏக்கமோ
உன் - இடைத் தேடி
இளைத்துப் போகுது ..!!
- இராஜ்குமார்