பறக்கும் போது படித்து விடு - இராஜ்குமார்

கிளையின் இலையில்
எறும்பை போல
குறும்புகள் செய்யும் எனை
பார்வையில் பறித்து
நிஜங்களை நீயே
அன்போடு அழித்தாய் ..!!

வளைவான பாதையின்
விளைவை அறிய
காதல் எனக்கு
கற்று கொடுத்தது ..!!

தேகம் வருடிய
வார்த்தை எல்லாம்
மூச்சுக் காற்றில்
மூழ்கிப் போக
எழுத்துப் பிழைகள்
என்னிடம் மட்டும் ..!!

எனது உணர்வுகள்
அச்சிடப்பட்ட - காதல்
கவிதை தொகுப்பின்
இறுதிப் பக்கத்தில்
இல்லாமல் போனது
பூக்கள் ஏந்திய - எனது
புன்னகை காதல் ..!!

நீ
ஏற்க மறுத்த
காதல் கவிகளை
உன்விரல் பிடித்து
பறக்கும் பட்டம் ஒன்றில்
பதித்து வைக்கிறேன்

பெண்ணே
பறக்கும் போது
படித்து விடு ..!!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (15-Aug-14, 4:35 am)
பார்வை : 399

மேலே