ரெண்டும் கெட்டவர்கள் சங்கம் சார்பாக - இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தோழமையே

ரெண்டும் கெட்டவர்கள் சங்கம்
============================

வயது மறந்து பேசிடுவோம்
வரம்பு - கெட்டவர்கள் நாங்கள்
ஆரோக்கியமாய் போட்டியிடுவோம்
பொறாமை - கெட்டவர்கள் நாங்கள்
புனிதமாய் உறவாடுவோம்
களங்கம் - கெட்டவர்கள் நாங்கள்
தளத்தில் தேடிடுவோம்
நேரம்- கெட்டவர்கள் நாங்கள்
காயங்கள் மறந்திடுவோம்
கண்ணீர்-கெட்டவர்கள் நாங்கள்
தெளிவாய் எண்ணியிருப்போம்
அழுக்கு- கெட்டவர்கள் நாங்கள்
தனிமையில் சிரித்திடுவோம்
பைத்தியம் - கெட்டவர்கள் நாங்கள்
திடசிந்தனை பெற்றிருப்போம்
கோழை- கெட்டவர்கள் நாங்கள்
கற்பனைகள் வெளிப்படுத்துவோம்
நிராசை - கெட்டவர்கள் நாங்கள்
ஆளில்லா கடையில் ஆத்திடுவோம்
சோம்பேறி- கெட்டவர்கள் நாங்கள்
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
சாதி - கெட்டவர்கள் நாங்கள்
முகம் அறியாது நேசிப்போம்
முகவரி - கெட்டவர்கள் நாங்கள்
நம்மை இணைத்த இத்தளத்தை
வாழ்த்திட வார்த்தைகள் -கெட்டவர்கள் நாங்கள்
வார்த்தைகளில்லா காரணத்தால் தேங்காயை சுத்தி
மடிக்கணினியின் மீது போட்டு உடைத்தவர்கள் நாங்கள்

சோடா குடுங்கப்பா......................
சங்க உறுப்பினர்களே...................

அதுவும் கெட்டவர்கள் இதுவும் கெட்டவர்கள்
என ரெண்டும் - கெட்டவர்கள் நாங்கள்
சொல்லப்போனால்..................
அனைத்தும் கெட்டவர்கள் நாங்கள்

அனைவருக்கும் இந்த
அனைத்தும் கெட்டவளின்
"இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்"
தள ஐயாக்களே, அப்பாக்களே,அம்மாக்களே
தோழிக்களே,தோழர்களே,சகோதரிகளே,சகோதரர்களே....

குறிப்பு : தலைவர்-ராம்வசந்த்(ரெண்டும் கெட்டவர்கள் சங்கம்)
மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு
இவ்வரிகள் சமர்ப்பணம்....(இது முழுக்க முழுக்க ரெண்டும் கெட்டவர்கள் சங்கம்
சார்பாக எழுதப்பட்ட வரிகள்)

மிக முக்கிய குறிப்பு: பாராட்டுவதாக இருந்தால் தாராளமாக பாராட்டலாம்...
அடிப்பதாக இருந்தால் தலைவரின் முகவரி வாங்கி தருகிறேன்
வீடு தேடி போய் செம அடி கொடுத்துவிட்டு வரவும்...
தலைவர் வாழ்க..........!!!

இப்படிக்கு : சங்கத் தலைவர் ராம்வசந்த் அவர்கள் திருத்திக் கொடுத்த இந்த வரிகளை
பந்தாவோடு பதிவேற்றம் செய்யும் சங்க கொ.ப.செ. மணிமேகலை.

எழுதியவர் : மணிமேகலை (15-Aug-14, 9:53 am)
பார்வை : 167

மேலே