சுதந்திரம்
தாயின் கருவறையில் பிறந்து
தாய்நாட்டின் கருவிழியில் வாழும் எம் வீரர்களுக்கு
என் வீர வண்ணகங்கள்
கதையில் படித்த ரசித்த போர்களை விட
எம் முன்னோரின் வீர மரணங்கள்
எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது
மானுடரின் இரத்ததின் நிறம் சிவப்பு என்பதை
எம் சுதந்திர வீரர்களினால் தான் இந்த உலகம் அறியும்
சுற்றித்திரியும் காற்றில் உம் சுதந்திர தாகம் கலந்திருப்பதால்
இன்று சுதந்திரமாய் சுவாசிக்கிறோம்
அன்று
எட்டு திசையிலும் சிந்திய இரத்தங்கள்
எட்டி உதைக்கப்பட்ட என் பாரத தாயினை
எட்டி பிடித்ததால் கிடைத்தது
என் தாயின் நாட்டின் சுதந்திரம்
நீ பிறந்த கருவறையில் நானும் பிறந்ததால்
பெருமிதம் அடைகிறேன்
நீ வாங்கிய சுதந்திரம் இன்று மண்ணாய் போவதில்
பெரும் துயரும் பெறுகிறேன்
விதையில் முளைத்த ஆலமரம்
விதியாலும் அழிவதில்லை
எம் வீரனின் உயிரில் கிடைத்த சுகந்திரம்
இன்று சதியால் அழிந்துபோகிறது
இன்று எத்திசையில் இருக்கிறது எங்கள் சுதந்திரம்
பாரத வீரனின் இலட்சியங்கள்
இலஞ்சத்திற்கு கிடையில் சிக்கி நிற்கிறது
ஊழலின் மொழியில் எம் பேச்சி உரிமை தடைபெறுகிறது
வனவிலங்குகளுக்கும் வனத்தைக்சுரண்டும் விலங்குகளும்
பயப்படும் நிலையில் எம் மக்களின் நிலைமை இருக்கிறது
உன் கருத்தை சொல்ல சுதந்திரமில்லை
பெண்ணின் மானம் இன்னும் சரிவர காக்கப்படவில்லை
சாதிவெறியின் பிடியில் இன்னமும் சிக்கிக்கொண்டு தான் இருக்கிறோம்
அன்று
சொந்த மண்ணின் சுகந்திரத்தை அந்நிய நாட்டிடமிருந்து பெற்றோம்
இன்று
அந்நிய பங்குச்சந்தையில் விலை போக வரிசையில் நிற்கிறோம்
சுதந்திரம் எனும் போலி முகமூடியில்
உம்மை தொலைக்காதே
உண்மையான சுதந்திரத்தை அன்று பெற்றோம்
உண்மையில் சுதந்திரத்தை அனுபவிக்க இன்னும் காத்துக்கொண்டு தான் இருக்கிறோம்
மீண்டும் ஒரு போராட்டம் புரிவோம்
உண்மையான சுதந்திரத்தை சுகமாய் சுவாசிப்போம்
விழும் முன்
விழித்தெழு
என் இளைய சமுதாயமே !!!