கார்கில்்போர்்்
படித்ததில்பிடித்தது::
சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம், 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த "கார்கில்' போர் குறித்துபுரட்டி பார்க்க வேண்டியது அவசியமான ஒன்று.
இந்தியாவில் உள்ள 5வது பெரிய மாநிலம் ஜம்மு காஷ்மீர். சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகளின் எல்லை கோடுகள் இந்த மாநில எல்லை கோட்டை ஒட்டி செல்கிறது.
இங்குள்ள 15 மாவட்டங்களில் கார்கிலும் ஒன்று. தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 288 கி.மீ. தூரத்தில் கார்கில் உள்ளது.
ஆப்பரேஷன் விஜய்்::
இந்தியபாக்., எல்லையில் கரடுமுரடான 1800 அடி உயர சிகரங்களை கொண்ட கார்கிலில் சாதாரண சூழ்நிலையிலேயே தாக்கு பிடிப்பது கடினம். குளிர்காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் இறங்கிவிடும். இதனால் இரண்டு நாட்டின் வீரர்களும் செப்., 15 ஏப்., 15 வரை, ஒப்பந்தத்தின் படி, கார்கில் சிகரங்களிலிருந்து பின்வாங்குவார்கள். ஏப்ரலின் பிற்பகுதியில் வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணிகளை தொடர்வர்.
1999 ஏப்ரலில் கார்கிலில் பாதுகாப்பு பணியை தொடர சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. ஆரம்பத்தில் 500 முதல் 1000 பேர் வரை ஊடுருவி இருக்கலாம் என இந்தியா நினைத்தது. ஆனால் 5 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் எல்லை தாண்டி இந்திய நிலைகளுக்குள் ஊடுருவி இருப்பது பின்னர் தெரிந்தது.
இந்தியாவின் 200 சதுர கி.மீ., பரப்பளவு பகுதியை ஊடுருவல்காரர்கள் ஆக்கிரமித்திருந்தனர். பாகிஸ்தானின் சதியை முறியடிக்க "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. 2 லட்சம் வீரர்களை இந்தியா போரில் ஈடுபடுத்தியது.இதில் 30 ஆயிரம் வீரர்கள் நேரடியாக போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மே 3கடந்த 1999 மே மாதம், சாதாரண ஆடு மேய்க்கும் சிறுவர்கள், ஊடுருவல்காரர்கள் சிலர் கார்கில் பகுதியில் சுற்றி திரிகின்றனர் என்ற தகவல்களை ராணுவ வீரர்களிடம் கூறினர்.
மே 5ல், சிறுவர்கள் கூறிய தகவல்களை இந்திய ராணுவம் உறுதிசெய்தது.
மே 8ல், இந்திய ரோந்துக்குழு ஊடுருவல்காரர்களால் தாக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் விமானம் மூலம் சோதனைநடத்தியதில் கார்கில் மற்றும் அதன் அருகே உள்ள டிராஸ் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மே 2வது வாரம்: கேப்டன் சவுரப் காலியா தலைமையிலான, 5 வீரர்கள் ( செபாய்ஸ் அர்ஜூம் ராம், பன்வர் லால் பகரியா, பிகா ராம், மூலா ராம் மற்றும் நரேஷ் சிங்) பாகிஸ்தான் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
மே 15ம்தேதி இப்படையினர் காணாமல் போகினர் என தகவல் வந்தது. (ஜூன் 9: இந்த 6 ராணுவ வீரர்களின் சிதைந்த உடல்கள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. )
மே 9: 2 பட்டாலியன் படைகள் சியாச்சின் பகுதியில் இருந்து,பட்டாலிக் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். மற்றும் அடுத்த சில தினங்களில் மேலும் 3 பட்டாலியன்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து, கார்கில் பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.
மே 24: கூடுதலாக 2 படைகள் போர் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். மேஇறுதியில், லே பகுதியில் இருந்த கூடுதல் மண்டல தலைமையக படையினர் கார்கில் பகுதிக்கு சென்றனர்.
மே 25: பாக்., படையினர் மலைப்பகுதியில் ஊடுருவி இருந்ததால், அவர்களை கீழிருந்து தாக்குவது நமது ராணுவத்துக்கு கடினமாக இருந்தது. இதையடுத்து வான்வழியாக தாக்குவதற்கு"ஆப்பரேசன் சாபெட் சாகர்' என்ற பெயரில் இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதலைத் துவக்கியது. அப்போது 30 வீரர்களை இந்தியா பலி கொடுத்தது.
மே 26: மிக் 21 மற்றும் மிக் 27 போர் விமானங்கள், மேகத்தினை கிழித்துக் கொண்டு, எதிரிகள் மீது ராக்கெட்டுகளை வீசியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகள் சேவை நிறுத்தப்பட்டது.ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.எம்.ஐ., 17 ரக ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டன.
மே 27: மிக்27 போர் விமானம் இன்ஜின் பழுதடைந்தது. இருப்பினும் பைலட் நச்சிகெடா, சாமர்த்தியமாக தரையிறக்கினார். இவரை பாக்., படையினர் சிறைபிடித்துச் சென்றனர். (பின் விடுவிக்கப்பட்டார்) இதையடுத்து விமானப்படை தலைவர் அஜய் அகுசா, காணமல் போன மிக் 27 விமானத்தை தேடி, மிக் 21 விமானத்தில் சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விமானமும்,இன்ஜின் பழுதாகி பாகிஸ்தான் படையினர் முகாமிட்டிருந்த, இந்திய எல்லை பகுதியில் தரையிறங்கியது. அடுத்த வினாடியே பாகிஸ்தானின் ஸ்டிங்கர் ஏவுகணை அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது.இதில் அவர் பலியானார். (ஆனால் அவர் பாதுகாப்பாகவே தரையிறங்கியுள்ளார். பாக்., ராணுவத்தினர் அவரை கொடூரமாக சுட்டுக்கொண்டுள்ளனர் என்பது அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இது அச்சமயத்தில்இந்திய மக்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.)
மே 28: மிக் 17 ரக ஹெலிகாப்டர், பாகிஸ்தானின் ஸ்டிங்கர் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து இந்திய ராணுவம், இவ்வகை ஹெலிகாப்டர் போரில் ஈடுபடுவதை திரும்ப பெற்றது.
மே 30: இந்திய விமானப்படை, லேசார் குண்டுகளுடன் கூடிய"மிரேஜ் 2000' என்ற போர் விமானங்களை போர்க் களத்தில் இறக்கியது. இது டைகர் மலை, பாயின்ட் 4388, முந்தோ தாலோ ஆகியவற்றை பாக்., படையினரிடம் இருந்து மீட்க போராடியது.
* "ஆப்பரேசன் தல்வார்' என்ற பெயரில் இந்திய கப்பல்படை, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை நோக்கி, நீர்மூழ்கி போர்க் கப்பல்களை அனுப்பியது. கிழக்கு கடற்படை வீரர்கள் அனைவரும், மேற்கு கடற்படை வீரர்களுடன் அரபிக்கடல் பகுதியில் இணைந்தனர்.
* 250 போபர்ஸ் பீரங்கி குண்டுகள், கார்கில் போரில் முக்கிய பங்கு வகித்தன.ஜூன்: இந்திய ராணுவம், பாகிஸ்தான் கைப்பற்றிய மலைப்பகுதிகளை மீட்பதில் சீராக முன்னேறினர். இரு தரப்பிலும் பலி ஏற்பட்டது.
ஜூன் 13: எல்லை பகுதியில் போர் வீரர்களை சந்தித்து ஊக்கம் தர பிரதமர் வாஜ்பாய் கார்கில் சென்றார். அவர் பேச இருந்த இடத்தில் பீரங்கி தாக்குதல் நடந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ஜூன் 30ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த ஒற்றைமலை, மும்முனைச்சிகரம், கரும்பாறை சிகரம் 4,700 மீ. சிகரம் ஆகிய 4 சிகரங்களை இந்திய படைகள் மீட்டன. இந்த சண்டையின்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜூலை 1: டிராஸ் பகுதியில் உள்ள 5100 மீ., சிகரம் படாலிக் பகுதியில் 5000 மீ, சிகரம் உட்பட இப்பகுதியில் மற்றொரு முக்கிய சிகரமும் இந்திய படைகள் வசம் வந்தது.
ஜூலை 4: டிராஸ் எல்லை பகுதியில்உள்ள டைகர்மலையை மீட்க இந்திய ராணுவம் இறுதி கட்ட தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.பாகிஸ்தான் ராணுவத்தினர் 21 பேர் பலியாயினர். டிராஸ் மலைபகுதியில் டைகர் மலையை வெற்றிகரமாக இந்திய ராணுவம் மீட்டது.
ஜூலை 6ல், டிராஸ் பகுதியில் டைகர்மலைக்கு மேற்கே உள்ள முக்கிய சிகரத்தை(4875 மீ) இந்திய ராணுவம் மீட்டது.
ஜூலை 9ல் படாலிக் பகுதி முழுவதும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
ஜூலை "11: தொடர்ந்து பாக்., படைக்கு பின்னடைவு மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்கடி ஆகியவை காரணமாக பாகிஸ்தான், போரில் பின்வாங்குவதாக அறிவித்தது.
ஜூலை 26: பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் முற்றிலும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டதாக, இந்திய ராணுவம் அறிவித்தது. 520 இந்திய ராணுவ வீரர்கள், இந்த போரில் பலியாகினர்.
இப்போரில் வீர தீரச் செயல்களை செய்த ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக (4 பரம் வீர் சக்ரா, 9 மகா வீர் சக்ரா மற்றும் 53 வீர் சக்ரா மற்றும் பல விருதுகள்) விருதுகள் வழங்கப்பட்டது.