ஏலகிரி

ஏலகிரி!
ஏழைக்கேற்ற எழில் மலை ஸ்தலம்
சிறு ஏரி, பூங்கா, மலைக் குன்றுகள்
சுடர் சூரியனுடன் சிலீர் காற்று

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் மக்களுக்கு
அருகில் இலவச குளிர் வாசம்
காலை கட்டு பிரியாணியுடன் ஏறினால்
மாலைவரை குடும்பத்துடன் குதூகலம்
உறவரியா வரும் இளம் ஜோடிக்கும்
இதம் தரும் இனிய மலை!

சென்னை, பெங்களூரு வசிப்போர்க்கு அருகில்
அவசரக் குளிர் வாச மலை
ஓரு நாள் தங்கி ஓய்வு பெற
உருவான அற்புத இளைப்பாறல் கூடம்

வருவார் மக்கள் என எதிர்பார்த்து
தருவார் பலரக இளைப்பாறும் விடுதிகள்
மலைகள் சோலைகள் அழித்தே வந்த
நீள் மதிர் மாளிகை ஓய்வுக் கூடங்கள்

ஏர்காடு இனிய மலை இங்கே
மக்கள் கூட்டம் களியாட்டம்

பிரியாணிக் கூட்டம் பிரிந்து செல்கையில்
மதயானை்ப் புகுந்தார்ப் போல் பூங்கா!
சில தலைக்கேறி்த் தறுதலைக் கூட்டம்
விளையாட்டுப் பொருட்கட்கு வினை வைக்க
---இன்று
பெரியோர் செய்யும் பிழைகட்கெல்லாம்
சிறியோர் நாளை பேருந் துயர் அடைவர்

குளிர் மலை, பசுமைச் சோலை, நிலா
தளிர் காற்று இவை ரசிக்காமல்
அங்கும் சீரியல் 'தென்றல்' காண
அறை சிறை அடைவோர் அறியாமை!

எங்கோ சென்றும் இனிமை சுவைக்காதார்
எங்கும் இன்பம் உண்டென்று அறியாதார்!

நம் மனத்திற்குள் நாம் விதைக்காவிடில்
நாட்டில் நிம்மதி எங்கே ஏற்படும்?
---- முரளி

எழுதியவர் : முரளி (15-Aug-14, 10:42 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 4003

மேலே