அல்வாவின் ரகசியம்

அல்வாவின் ரகசியம்.

அல்வான்னா அல்வாதான்
திருநெல்வேலி அல்வாதான்.
உள்வாயில் உரசாம
உள்ளபோற அல்வாதான்.

திருநெல்வேலி அல்வாதான்
திருடித்தின்னும் அல்வாதான்.
இருட்டுக்கடை அல்வாதான்.
உருட்டிப்போடும் அல்வாதான்.

அத்தக்காரிக்குத் தெரியாம
அசைச்சித்தின்னும் அல்வாதான்.
மெத்தைக்கான சூட்சமம்
மெருன்கலர் அல்வாதான்.

அல்லுன்னா ராத்திரி
வாவுன்னா வந்துரு
அல்வான்னா புரியுதா?
அறிஞ்சுக்கோ ரகசியம்.

தீராத கோபமா
தீர்த்துவைக்க வேணுமா?
ஜோரான நெய்வாசம்
ஜொள்ளுறும் அல்வாதான்.

அல்வாவும் பூவுமா?
அதவிட வேணுமா?
சொல்லாம சொல்லுமா?
கதவுதானா மூடுமா?

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (15-Aug-14, 6:51 pm)
பார்வை : 126

மேலே