பழி ஒரு பக்கம்
"ஏழு மணிக்கு
என் குறுஞ்செய்தி
வரும்"
எனச்சொல்லிச் சென்றாய்.
மணி ஏழைந்து ஆகிறது!
இம்சையான இந்நேரத்தில்
நான்காவது முறையாக
ஆப்பிள்
டிங் என செய்திக்கான
ஒலி எழுப்பிக் கொண்டிருக்கிறது ...
மூன்று முறையும்
ஆவலோடு எடுத்து
" பன்னாடை ..பொறுக்கி..பொரம்போக்கு.. "....
அனுப்பிய
நணபர்களை
அர்ச்சனை செய்துவிட்டேன்.
இம்முறையேனும்
நீயாக இருந்துவிடு!...
பாவமடி
அப்பாவி நண்பர்கள்!!