பிழை
பிழை ! 31.7.14 (ஒரு நண்பனின் உண்மை கதை)
அப்பா
அன்று வந்தது
அம்மா சொல்லி தெரியும்
பாதி உறக்கத்தில்
பார்த்தது போல இருக்கு.
சத்தமாக இருவரும்
சண்டையிட்டு பேசினார்கள்.
இந்தப்பக்கமே இனி வரமாட்டேன்
எப்படியோ தொலஞ்சு போ
அறைந்து சார்த்திய கதவில்
அப்பா கத்தியது ஒலித்தது.
அழுகை சப்தம் கேட்டு
எழுந்து பார்த்தேன்
இருட்டில்
ஒரு மூலையில்
முகம் சேலையில் மூடி
அம்மா !
பிறகு நெடுங்காலம்
மறந்து போனதுபோல
அப்பாவின் நினைவுகள் .
அம்மா சொல்லுவாள்
உனக்கு எல்லாம் நான்தான்
அந்தாளு செத்துப் போயிட்டான் !
வாலிபம் வந்து
விவரம் வளர்ந்தபோது
அம்மாவிடம் கேட்டேன்
அப்பா எங்கம்மா
கண்கள் நிலைக்க அவள்
என் முகம் நோக்கியதும்
மௌனமாய் வெளியில் வந்தேன் !
நண்பர்கள் மத்தியில்
நான் என்றும் தனியாய் தெரிந்தேன்.
எங்கோ ஒரு பிழை
என் வாழ்வில் ஒளிந்திரிக்கிறது.
“தேவடியா பையன்”
ஒரு நாள் கல்லூரியில்
ஒருவன் அதற்கு விளக்கமிட்டான் !