பயணம்

உலகம் என்னவென்று தெரியாதா
வாழ்க்கை என்னவென்று புரியாதா
தொடர்ந்து செல்வதுதான் வாழ்க்கையன்றோ
தொடர்ச்சி என்பதே பெரும் தொடர் அன்றோ

இது பாதை தெரிந்த பயணம் அல்ல
நேர் கூடிய பாதையும் அல்ல
வளைந்து செல்லும் பாதை அன்றோ
அதுவும் ஒத்தையடி பாதையன்றோ

மண்மிசை ஏகும் மாற்றங்கள் எல்லாம்
மாறிவரும் நிலைபாடு அன்றோ
மாறுவதே இயற்கை அன்றோ
இயற்கையே நமக்கு பாடம் அன்றோ

படிப்பது மட்டும் பாடம் அல்ல
படர்ந்து நிற்பதும் பாடம் அன்றோ
நடிப்பதும் துடிப்பதும் வேண்டாம் அன்றோ
கற்பதும் கேட்பதும் வேண்டும் அன்றோ

கடப்பதுதான் பயணம் என்றால்
அதில் வருவார் போவார் யாவரோ
அருகையும் தூரமும் பயணமேயானால்
முற்றும் கடப்பதே முழு பயணமாகும்

எழுதியவர் : ரமணி (17-Aug-14, 6:47 pm)
சேர்த்தது : ரமணி
Tanglish : payanam
பார்வை : 81

மேலே