நல்ல நியாயமடா
ஆண் எழுதிய கதைகள்...
அவன் நாயகன்,
ஆசை நாயகி
இறந்த பின்
அடுத்தவளை மணப்பான்!..
செத்தவள் கனவினிலே
சேர்ததும் வைப்பாள்!
"மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
........
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு"
இன்னொரு கதை....
அவன் நாயகன்
தான் இறந்தபின்
இன்னொரு மணம்
முடிக்கச் சொல்வான்...
அவள் அழுகையில்
ஆனந்தம் அடைவான்!
"சொன்னது நீதானா
சொல் சொல் சொல்
..........
இன்னொரு கைகளிலே
யார் யார் நானா
எனை மறந்தாயா "