ஒரு மனம் வேண்டும்

தந்தையின் அட்டவனையில் என்
பெயர் இடம்பெராமல்
இருந்திருந்தால் ?

தாயின் அரவனைப்பில் ஆதரவு
கிடைக்காமல்
இருந்திருந்தால் ?

தங்கையின் தார்மீக கடமையில்
என்னுடைய பங்கு
இல்லாமல் இருந்திருந்தால் ?

நண்பனின் நாடகத்திற்கு என்னை
பயன்படுத்தாமல்
இருந்திருந்தால் ?

காதலியின் கார்கூந்தலால் நான்
கவரப்படாமல்
இருந்திருந்தால் ?

நான் பெற்ற பட்டத்தில் என்னுடைய
பெயர் இல்லாமல்
இருந்திருந்தால் ?

வாய்ப்பு தேடி செல்லும் இடமெல்லாம்
என்னை வாசலில் காக்க
வைக்காமல்
இருந்திருந்தால் ?

வாக்குறுதி கொடுத்தவர்களின்
நாக்கு நடனமா-டாமல்
இருந்திருந்தால் ?

காயத்திற்க்கு என் கவிதைகள்
மருந்தாக-மல்
இருந்திருந்தால் ?

என் கற்பனைக்கு மட்டும் சாரம்
பூட்டப்பாடாமல்
இருந்திருந்தால் ?

இந்த நிலையும் மாறும் என
நம்பிக்கை இல்லாமல்
இருந்திருந்தால் ?

எனக்கு புரிந்து கொள்ள ஒரு
மனம் வேண்டும் ....

எழுதியவர் : bhuvan (17-Aug-14, 7:29 pm)
சேர்த்தது : குட்டி புவன்
Tanglish : oru manam vENtum
பார்வை : 82

மேலே