எங்கே போன
மழை சில்லென உன்னைத்தொட..
துள்ளி துள்ளி ஆட்டம் போடுவே...
இன்னும் உன் விளையாட்டு முடியலையா..
எங்கே போன...!
எடுத்ததுக்கெல்லாம் தொட்டாச்சினுங்கிப் போல..
தேம்பி தேம்பி சத்தம் போட்டு அழுதிடுவே..
இன்னும் உன் சோகம் போகலையா...
எங்கே போன...!
பேய் கனவு நடுநிசியில வரும்போது..
பதரியடிச்சி நடுக்கத்தோட எழுந்திடுவே..
இன்னும் உன் பயம் குறையலயா...
எங்கே போன...!
உனக்கென்று ஓர் உலகம்..
இந்த உலகை புரியாம வாழ்ந்திடுவே..
இன்னும் உன் அறியாம தீரலையா...
எங்கே போன...!
அம்மாவின் இதமான சூட்டுல..
சுகமா நீயும் தூங்கிடுவே...
இன்னும் உன் கனவு கலையலையா..
எங்கே போன...!
அப்பாவின் தோள் அரியணையில ..
பெரிய ராஜா போல அமர்ந்திடுவே..
இன்னும் நீ கீழே இறங்கலையா...
எங்கே போன...!
மனசாட்சி கெட்ட...
இந்த மனுசங்க வாழும் உலகத்துல...
உன்னை நானும் தொலைச்சிட்டனா..
என் குழந்தை மனசே...!!
எங்கே போன....
உன்னை காணலையே....!!!