பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணே நீயும் பெண்ணா.......?
ஜவுளிக்கடை பொம்மையோட ஆடை கொஞ்சம் விலகியிருந்தா பெண் நானே சில சங்கடத்திற்கு ஆளாகிறேன்.....! அப்படி இருக்கும் பொழுது ஆண்கள் ......அவர்களை நான் குறை சொல்லவில்லை! பெண் என்பவளுக்கு அச்சம் , மடம், நாணம், பயிர்ப்பு....இவற்றில் குறைந்த பட்சம் ஒன்றேனும் இருக்கவேண்டும் அப்படி இருந்தால் தான் அவள் பெண் இல்லையென்றால்............??????
நான் ஒரு உடை வடிவமைப்பாளர் என்னிடம் வரும் பல பெண்கள் அப்படி வேண்டும் இப்படி வேண்டுமென்று சொல்வார்கள் அதை உன்னிப்பாக கவனிப்பேன் பின்பு அவர்களின் மனதிற்கேற்றபடி ஆடை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நமது கலாச்சாரத்திற்கு எவ்வித குந்தகமும் வராதபடி தயார் செய்வேன் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை எடுப்பேன்..இதை பல ஆண்கள் பாராட்டவும் செய்வர்
பண்டைய நாட்களில் பெண்குழந்தைகளை குழந்தைகளாகவே பார்த்தனர் ஆனால் இப்பொழுது அவள் குழந்தையல்ல "பெண் " என்ற கண்ணோட்டத்திலேயே கவனிக்கப் படுகிறாள்! அவள் சிறு குழந்தைஎன்றாலும் கணுக்காலுக்கு மேலே எப்பகுதியும் தெரியாதபடி அதே நேரம் உடலை உறுத்தாத படி உடை அணிய வேண்டும் என்பது ஒரு பெண்ணாகிய எனது வேண்டுகோள்!
உண்மையை சொன்னால் என் கைகள் எழுதுகோல் எடுத்ததால் என்னவோ ஆண்களை ரசிப்பதை விட பெண்களை அதிகம் ரசிப்பேன்! அந்தப் பெண் நிச்சயம் பெண்மையின் இலக்கணத்திற்குள் நிச்சயம் கட்டுப்பட்டிருக்க வேண்டும்! அது எனது நிர்பந்தம்! அதனாலேயே மறுபடியும் தமிழகத்தில் பட்டுப்பாவாடை வலம் வர வேண்டும் என்பதற்காக யாரும் டிசைன் செய்ய முடியாத அளவுக்கு அழகாய் டிசைன் செய்து சிறுமிகளை கவரச் செய்தேன்..... தாவணி பாவாடை மறுபடியும் உலா வர வேண்டும் என்ற எண்ணத்தில் தாவணி பாவாடை உடுத்தால் எப்படி இருக்கும் என்று அவ்வளவு அழகாய் வர்ணிப்பேன் அதை கேட்கும் எவருக்கும் பாவாடை தாவணி உடுத்த ஆசை வந்துவிடும்!
ஆள் பாதி ஆடை பாதி இதுதான் நம் காலாச்சாரம் ஒருவரை நாம் முதலில் மனதில் கொள்வதும் இதை வைத்துத் தான் !பண்டை நாட்களில் சிறிய குழந்தைகள் என்றால் பாவாடை சட்டை கொஞ்சம் பெரிய பெண்கள் என்றால் தாவணி இன்னும் பெரியவர்களுக்கு புடவை . வயதுக்கு வந்த பெண் என்றால் கண்டிப்பாக அவள் தாவணி கட்டியாக வேண்டும் இது எழுதப் படாத நியதி......
ஒருபெண் தாவணி உடுத்தும் போழுது உடலில் இடை பகுதி வெளியில் தெரியும் அப்பொழுது அந்தப் பெண் தெரியும் பாகங்களை மறைக்க அடிக்கடி தன் ஆடையை சரிசெய்வாள். தன அங்கங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக இருப்பார்கள் இதன் மூலம் அவர்களுக்கு நாணம் என்ற ஒன்று இயற்கையாக அவர்களிடம் வந்துவிடுகிறது! நிமிர்ந்து நடந்தால் எங்கே மற்றவர்களின் பார்வை தவறாக தன்மீது பட்டுவிடுமோ என்ற பயத்தில் குனிந்து நடக்கிறார்கள் அதனால் வெட்கம் என்பது தானாக வந்து ஒட்டிக்கொள்கிறது......
ஆனால் தற்போதைய பெண்கள் மேலிருந்து கீழ் வரை ஒரே ஆடை அணிகிறார்கள் இடை பகுதி வெளியில் தெரிவதில்லை அதை சரிசெய்ய அவசியமில்லை அதனால் நாணம் என்ற ஒன்று இல்லவே இல்லை! ஆனால் தவறில்லை அதற்கான துப்பட்டாவை சரியாக அணிந்தால் ஆனால் குனிந்து நடக்காததால் வெட்கம் கொஞ்சமும் இல்லை! இதைப் படிக்கும் "பெண்கள்" சண்டைக்கு வரமாட்டார்கள் என்று நம்புகிறேன்........
கண்டிப்பாக தன் உடலின் அங்கங்கள் வெளியில் தெரியும்படி உடை உடுத்தக் கூடாது! உடை என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்றாலும் அதை அவர்கள் நான்கு சுவருக்குள் வைத்துக் கொள்ளவேண்டும்! மற்றவர்களுக்கு காட்சிப்படுத்தக் கூடாது! இறுக்கமாக ஆடையணிந்து எதற்கு மற்றவர்களை கிறுக்கு பிடிக்க வைக்கிறீர்கள்?
பெண் ஒன்றும் காட்சிப் பொருளல்ல! எனைப் பார் என் அழகைப் பார் என்று வலம் வர! அழகு ஆராதிக்கப் படவேண்டியது அசிங்கப் படவேண்டியதல்ல! பெண்கள் எவற்றை மறைக்க வேண்டுமோ அவற்றை மறைத்துதான் வாழவேண்டும்! இது அவர்களுக்காக இல்லாவிட்டாலும் இந்த சமுதாயத்திற்காக நிச்சயம் இதை செய்தாக வேண்டும்!
ஒரு பெண் தலைபின்னி பூச்சூடி போட்டுவைத்து அழகான சேலையுடுத்தி மற்றவர்களின் முகம் சுழிப்புக்கு ஆளாகாமல் வந்தால் அவளை நிச்சயம் கையெடுத்து வணங்கத்தோன்றும்! அரைகுறை ஆடையுடன் திரிபவளை அந்த நேரத்திற்கு ரசித்தாலும் கண்டிப்பாக இன்னொரு தருணம் கண்டபடி ஏசத்தோன்றும்! இதை நானும் ஒரு பெண் என்ற முறையில் தான் கூறுகிறேன்.....
பணம் கிடைக்கிறதென்று கண்டபடி ஆடும் நடிகைகள் எத்தனை நாட்கள் அவர்களின் வாழ்க்கை? யோசியுங்கள் ....... உங்களையெல்லாம் ரசிக்கத் தோன்றவில்லை நல்லா நாலு சாத்து சாத்தணும் போல இருக்கு..... கல்லுக்கே புடவைகட்டிப் பார்க்கும் எம் தாய் நாட்டின் அவல நிலையை நினைத்தால் அழுகை வருது...... பெண்கள் திருந்துவதாய் தெரியவில்லை . ஆண்களே யோசியுங்கள் அரைகுறை ஆடை அணியும் நடிகைகளின் படங்களைப் புறக்கணித்தாலே போதும் பாதி சீரழிவு மாறிவிடும்.......நம் வீட்டுப் பெண்களை இப்படி அலைய விடுவோமா இல்லை ரசிக்கத்தான் செய்வோமா?
அல்லிவட்டமும் புல்லிவடமும் சேர்ந்தால் தான் மலருக்கு அழகு!அதனாலேயே மலர் என்ற முழு வடிவமும் பெறுகிறது ! விதையை சதைப்பகுதி மறைத்தால் தான் அது பழம் சிறிது காலம் வாழும் மலருக்கும் விதைக்கும் இப்படியொரு நியதி என்றால் தலைமுறைகளை தாண்டி வாழும் மனித மரபிற்கு என்னென்ன நியதி வேண்டும்.........?
....................சஹானா தாஸ்