ஒண்ணுமே புரியல உலகத்திலே

தன்னை யார் என்று தெரியாமலே ,'வீச்' எனும் அழுகையுடன்' உள்ளேன் ஐயா'
என்று இந்த உலகத்திற்கு வரும் சிசு உலகத்தால் அறியப்படுகிறதா ?ஒன்றுமே அறியாமல் அழிந்து போகிறதா?

பிறப்பு முதல் இறப்பு வரை தன்னை பின் தொடரும் அரசியல் அறிந்தவனே வாழ்கை ஓட்டத்தில் வெல்கிறான்...........அறியாதவன் பின்னால் நிற்கிறான் என்பதை விட அவன் இந்த அரசியலுக்கே தகுதி அற்றவனாக சாலை ஓரத்தில் ஒன்றுமே தெரியாமல் படுத்து உறங்கும் நாய் போலவோ அல்லது பைத்தியக்காரன் போலவோ பார்க்க படுகிறான்......................ஆனால் அவனே பல நேரங்களில் உண்மையான ஒரு மனிதனாக எனக்கு புலப்படுகிறான்.

நடிப்பு என்பது ஒரு மனிதனின் மாபெரும் தகுதி.நடிக்க தெரிந்தவன் நல்லவன் பட்டம் வெல்கிறான்.......பல நேரங்களில் மனித குணங்களை ஆராய ,ஆராய சிந்திக்கும் ஆற்றல் நமக்கு இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ என்றே நினைக்க தோன்றுகிறது?

வீட்டில் ஆரம்பிக்கும் அரசியல், வெற்றியை நோக்கி துரத்தப்படும் நாம்.............
முதல் மதிப்பெண்,மேற்படிப்பு ,நல்ல வேலை ,சம்பளம்,இவையே உச்ச கட்ட துரத்தல்கள் .........................இது எல்லாம் பரவா இல்லை ................நல்லவன் பட்டம் வாங்க நாம படுற பாடு இருக்கே? அதுவும் நல்லவனுக்கும் நல்லவனாய் ,கெட்டவனுக்கும் நல்லவனாய் ........................ரொம்ப கஷ்டம் ......................அதுக்கு நாம முதலில் விட்டு கொடுக்க வேண்டியது வேற ஒண்ணுமே இல்லைங்க .......................நம்ம ஒரிஜினல் தான் ...................நடிச்சி,நடிச்சி நாள்பட நாம யாருன்னு நமக்கே மறந்திரும்.............அதுக்கு பைத்தியக்காரனா [நல்லவனா,சூது வாது தெரியாத புள்ளையா]இருந்துக்கலாம்.......

வாழ்க்கையை யதார்த்தமா வாழனும் னு எனக்கும் ஆசை தாங்க யாரு வாழவிடுறாங்க?.ஓட்டத்தில தோற்று விடுவோமோ?வாங்கின மதிப்பு ,மரியாதை காப்பாற்றனும் என்ற பயம் தான் பின்னாடி ஓடி வர்றவன் முந்திடக் கூடாது ,முன்னாடி ஓடுறவன நாம முந்தணும் னு ஓடி கிட்டே இருக்கிறோம் ...........எதுக்கு ஓடுறோம் னு மட்டும் சத்தியமா யாருக்கும் தெரியாது .....................ஆனா,ஓடி,ஓடியே செத்து போய்டுவோம்...........................

நானும் என் திருமணம் வரைக்கும் இந்த அரசியல் பழகவே இல்லை................எல்லாரும் என்னை ஒரு நல்லவள் என்ற ரீதில் இல்லாமல் ஏதோ இருக்குது அதுவும் ஒரு ஜென்மம் னு என்ற வரையில் தான் பார்த்தார்கள்............

என் கணவர் கிட்ட ஒரு நாள் பேசும் போது 'கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு ' என்றேன்.உடனே அவர் 'மனிதனை கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு' என்று திருத்தினார்.

அந்த பொறி தாங்க......இப்ப நானும் மக்களோடு மக்களாக இந்த ஓட்டத்திலே...............முன்னாடி ஓடுறது வேறு யாரும் இல்லை ..................அது என்னவர் தான் ............நிச்சயம் அவர மட்டும் முந்த மாட்டேன்............'எனக்கு வாழ்க்கை கற்று தந்த குரு' வாயிற்றே........................

ஆனால்


என் தலைமுறையே
உனக்கு இந்த ஓட்டம் வேண்டாம்.............வெற்றி ஒரு சூதாட்டம்
யதார்த்தம் பழகு.........
உன் உயரம் உன் வாழ்வு என கொள்
உன் மணித்துளிகளை மகிழ்ச்சியோடு கடந்து வா......................

எழுதியவர் : gowthamitamilarasan (18-Aug-14, 1:57 pm)
சேர்த்தது : gowthami
பார்வை : 216

மேலே