இதுவும் சாத்தியமாமடி

.."" இதுவும் சாத்திய(மா?)மடி ""...
சாட்டையடிகள் தேகம் முத்தமிட
நோகுமிடம்தனில் கொப்பளிக்கும்
குருதியல்ல உன் குரோதங்களே
சிரித்துக்கொண்டு அழுவதற்காய்
வெகுசிறப்பாகவே கற்றுத்தந்தாய்
துள்ளிக்குதிக்கும் கடலலைகளும்
நீர் சுமக்கும் கார்கால மேகங்களும்
சீறிப்பாய்கின்ற மலை அருவிகளும்
சிலிர்த்தோடும் பொன்னி ஆறுகளும்
இங்கே இருப்பதும் இல்லாததாய்,,,
மண்ணில் வேரூன்றா மரம்போல்
எல்லாம் வெறுமையாய் ஆகிவிட
அனல் நெருப்பாய்போனது வாழ்வு
நெருக்கமாய் காதலித்தால்தான்
இறுக்கமாய் வெறுத்திடமுடியும்
இதுயாவுமிங்கு சாத்திய(மா?)மடி
உதட்டோரம் புன்னகைத்தவாறே
என்னை புண்ணாக்கி கொல்கிறாய்
சகியே சாகாமலேயே ஒரு மரணம்
உன்னாளிங்கு சாத்தியமாகிறது ,,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....