சூரியத்தாமரை

கவிஞர் கண்ணில் சிக்கும்
பெண்கள் யாவரும் முழுமதியாம் - ஆனால்
நீ மட்டும் எனக்கு சூரியனே !!

நம் காதலில்
தோய்வே இல்லையடி !!
தேய்பிறை நாளிலும்
தொடரும் நம் காதலடி !!

சூரியனைச்சுற்றும் கிரகங்கள் போல்
உன் வீடு சுற்றும் என் வாகனமே !!

அலுவல் நேர சுமைகள் யாவும்,
பகலவன் பார்த்த பனித்துளி போல,
உன்னைக் கண்ட நேரம் மட்டும்
ஏனோ என் மனம் மறக்கிறதே
எல்லாம் உன்னுள் மறைகிறதே !!

எந்தன் உள்மனம் பூக்கிறதே
சூரியனை கண்ட தாமரையாய் !!!

தோழமை செய்த
துரோகங்கள் யாவும்,
உன் தோலில் சாய்ந்திட கருகிடுமே !!

தண்ணிரை ஈர்க்கும்
சூரியன் போல
உன் பார்வை
என் கண்ணீர் துடைத்திடுமே !!

பகலெல்லாம் உழைத்து விட்டு
வீடு வரும் சூரியனே !!
ஓய்வெடுக்கும் நேரங்கள் மட்டும்
எனக்காய் ஒதுக்கும்- உன்னை
சூரியன்றி யாதென உரைப்பேன் ?

சூரிய அஸ்தமனம் இல்லாதது
வெள்ளைக்காரன் சாம்ராஜ்ஜியம்
மட்டும் அன்றோ
என் வாழ்வும் தான் என்று
என்று நீ அறிவாயோ ?

கதிரவனை நம்பும்
உழவனை போல்
என் வாழ்வும் உன்னை
சார்ந்திடுமே !!

காலம் முழுக்க நன்றிகள் கூறினும்
பட்ட கடன் தான் தீர்ந்திடுமா ?
அறுவடை நாள் என்று வருமோ ?

அவ்வேளை வரும் வேலையிலே,
ஊர் முழுக்க கூப்பிட்டு
உன்னை மணமேடை
ஏற்றிடுவேன் !!

அதுவரை,
நான் பெற்ற வரங்கள் அத்தனையும்
உனக்காய் படையல் போட்டிடுவேன் !!
நான் பெற்ற அன்புகள் அத்தனையும்
உன் முகத்தில் பார்த்திடுவேன் !!

அக்னியை சாட்சியாய் வைத்து
அம்மியில் உன் கால் பதித்து
காலம் முழுக்க
உன் கரம் பிடிப்பேன் !!
குடைப்பிடிக்கும்
மச்சினனை
வேண்டாம் என்று
புரந்தள்ளி,
சூரிய நமஸ்காரம் செய்திடுவேன் !!
சூரியனே போற்றி என்றிடுவேன் !!

எழுதியவர் : - காவியன் (18-Aug-14, 1:47 pm)
பார்வை : 87

மேலே