ரகசிய காதலே - நாகூர் லெத்தீப்

இரு கண்களின் நடனம்
உள்ளங்களின் பரிமாற்றம்.......!

தேடுதல் தொடரும்
புது பாடல்கள் மலரும்......!

வசந்த கால நினைவுகள்
மறவாத உறவுகள்.........!

மனதாலே பேசிடும்
உணர்வாலே வாழ்ந்திடும்......!

தூரம் இருந்தாலும்
மறவாத உன்னத உறவு.....!

இரு உயிர்கள் உயிரை
மறந்து வாழும் மகிழும்......!

காலம் சென்றாலும்
முடியாத உன்னத நினைவு.....!

உள்ளத்தை வதைக்கும்
ரகசிய ராட்சசி காதலே......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (18-Aug-14, 2:49 pm)
பார்வை : 77

மேலே