தொலைந்து போகிறது மனது
தொலை தூரத்தில்
உன் குரல்
தொலைபேசியில்
கேட்கையில்
தொலைந்து
போகிறது மனது...
தேவதை ஒருத்தி
பூமிக்கு
இறங்கிவந்து என்கூட
பேசுவது போல்
எப்படி உன்னால் மட்டும்
இப்படிப்
பேசமுடிகிறது..
என் கனவு தேசத்து
ராணியே..
தொலைபேசி
அலாரத்தை விட
அதிகமாக அடிக்கிறது
என் இதயம்...
நீ தான் அழைப்பில்
என்று
தெரிந்தபின்...
தொலை தூரத்தில்
இருந்து வரும்
உன் குரல் கேட்கையில்
தொலைந்து போகிறது
எப்படியோ மனது...!

