பொ சஞ்சய் குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பொ சஞ்சய் குமார் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 19-Dec-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 20 |
வெற்றியின் பாதையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறேன்...
செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைதான்.
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
வானில் இருந்தாலும்
கடலில் இருந்தாலும்
நிம்மதி இழக்கும்
நீருக்கு,
நிரந்தரமா குடியமர
இடம் தரும்
எங்க ஊரு தெரு
கருப்பு சேலை அணிந்து
காட்சி தந்தாலும்
சாட்சி தேவையில்லை
சிதைவடைந்த கிழிசலுக்கு,
குடியமரும் மழை நீர்
குடி மக்களை
எப்போதும் மதிப்பதில்லை
ஒரு நாள்
ஓடாத மழை நீர்
ஓடிய வாகனத்தால்
வீசித்தெளிக்க—நான்
வேலியோரம் ஒதுங்க
உடைகள் அசுத்தப்படவில்லை
செருப்பு அசிங்கமானது
மடிமீது வளர்ந்து,
அடியெடுத்து வைத்து
நடை பயின்ற மகள்
மணமுடித்து
மணப் பெண்ணாய்
பொறந்த வீடுவிட்டு
புகுந்தவீடு நோக்கி
பிரிந்து போகிறாள்
தன் சொந்தங்களை
விட்டுவிட்டு
அடுத்தவருக்கு சொந்தமாகி
செல்லும் மகளின்
பாசத்தால் கண் கலங்கி
தவிக்கும் தாயின்
ஊமை வலி வேதனை
வார்த்தையில் அடங்காது
இயற்கை
பறவைக்கும், விலங்குக்கும்
இயல்பாய்
கற்றுக்கொடுத்ததை,
அறிவும், ஆற்றலுமிக்க
மனித இனம்
போராடி புரிந்துகொள்வது
வேடிக்கை தான்
ஒரு செயலை செய்ய
எனக்கு வாய்ப்புகள் இருப்பினும்..,
ஏனோ என் நெஞ்சம்
தோல்வியை சந்திக்க
துணைபுரிவது மட்டும்
எனக்கும் இன்னும்
பிடிபடவில்லை!
அதனால்தான் என்னவோ..
எவரிடமும் பேச பிடிக்கவில்லை!
படித்த நொடிபொழுதில் மனதில் பதிகின்றது...
ஆனால்,
மீண்டும் நினைவுபடுத்தி பார்த்தபோது சரியாக யோசிக்க முடியவில்லை!
அவமான படும் இடத்தில் எப்படி சூழ்நிலையை சமாளிப்பது ?
கல்லும் சிற்பமாகும்
வெற்றுச் சுவரும் ஓவியமாகும்
காகிதமும் கவிதை பேசும்
வானமும் சாஸ்திரமாகும்
காலமும் சரித்திரம் சொல்லும்
கண்ணியமான ஆசிரியர்கள் கிடைத்தால்..........
கடமையுணர்ந்து பணியாற்றிய ஆற்றும் அனைத்து ஆசிரியர்களுக்க்ம் என் வாழ்த்துக்கள்..............
என்னவனே
என் இதயமெல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக தொடுத்து
உனக்கு பரிசளிக்கலாம் என எண்ணி இருந்தேன் -ஆனால்
அந்த இறைவனோ எனக்கு ஒரு இதயத்தை கொடுத்து விட்டான்
அதனால் என் அன்பே ..............என் உயிரை சமர்பிக்கிறேன்
உன்னவள்......
parimala
நான் அடிக்கடி தோல்வியை சந்திக்கிறேன்! அதன் காரணம் அறியவில்லை ! தாங்கள் எனக்கு உதவ முடியுமா!
நான் அடிக்கடி தோல்வியை சந்திக்கிறேன்! அதன் காரணம் அறியவில்லை ! தாங்கள் எனக்கு உதவ முடியுமா!