வேடிக்கை தான்

மடிமீது வளர்ந்து,
அடியெடுத்து வைத்து
நடை பயின்ற மகள்
மணமுடித்து
மணப் பெண்ணாய்
பொறந்த வீடுவிட்டு
புகுந்தவீடு நோக்கி
பிரிந்து போகிறாள்

தன் சொந்தங்களை
விட்டுவிட்டு
அடுத்தவருக்கு சொந்தமாகி
செல்லும் மகளின்
பாசத்தால் கண் கலங்கி
தவிக்கும் தாயின்
ஊமை வலி வேதனை
வார்த்தையில் அடங்காது

இயற்கை
பறவைக்கும், விலங்குக்கும்
இயல்பாய்
கற்றுக்கொடுத்ததை,
அறிவும், ஆற்றலுமிக்க
மனித இனம்
போராடி புரிந்துகொள்வது
வேடிக்கை தான்

எழுதியவர் : கோ.கணபதி (13-Jun-16, 10:14 am)
Tanglish : vedikkai thaan
பார்வை : 77

மேலே