பெருமையா நமக்கு
அரிக்கேன் விளக்கு தரும்
ஒளிபோல்
அன்றைய கிராமங்கள்,
அதனை தாங்கிப்பிடித்து
அரவணைத்தது இயற்கை
இன்றோ
இயற்கைகள் அழிந்து
செயற்கை ஆகும் அவலம்—எங்கும்
ஈகை குணமும், நல்ல உள்ளமும்
இல்லாமல் போயின
தண்ணீர் சுமந்துவரும்
தங்கையின் மார்பு துணி
விலகியதை பார்த்த அக்கா
விட்ட அறை
விளக்கிடும் அன்றைய பண்பாட்டை
இன்றோ
சினிமா நடிகைகளின்
ஆடை அலங்காரத்தை
அங்கீகரித்து—மக்கள்
நடைமுறை படுத்தியதால்
அங்கங்களை மறைப்பது
அசிங்கமாகிப் போனது
பண்டைய பண்பாடு
பாழ்பட்டுக் கெடுவது
பெருமையா நமக்கு?