கைது செய்யப்பட்ட சுடர் - இராஜ்குமார்

வருட வருடமாய்
வானில் வலம் வரும்
வசதியில்லா வழக்குகள்
நிலவின் நீதிமன்றத்தில்
நிலுவையில் நிற்க ..!!

வளையம் ஒன்றில்
வசியம் செய்யப்பட்டு
மின்மினி போல ஓர் ஒளி
கூண்டில் நின்றது பல நொடி !!

உந்தன்
கைசேர்ந்த காரணத்தால்
கைது செய்யப்பட்ட சுடர்
கண்ணை கவரும் மலர் ..!!

விசித்திர விண்வெளி - எனை
வியப்புடன் காண - உந்தன்
காட்சி ஒன்றை
சாட்சியாய் வைத்து

கிரகம் ஒன்றை
கிள்ளி விட்டு
மேகத்தின் தாகம் தீர்க்கும்
மெல்லிய குரலில்
வாதாடி வாதாடி
வென்று விட்டேன்

நீ
விட்டு சென்ற
"விண்மீனின் விடுதலைக்காக "


இதோ
விடுதலையான விண்மீனை
விரலில் பிடித்து
விளையாடு ..!!

உந்தன்
கண்ணில் இருந்து - நான்
காணாமல் போகும் முன் ..!!

விளையாட்டில் - விரலின்
கணுக்களில் காயம் பட்டால்
கவலை வேண்டாம் - நான்
கட்டாயம் வருவேன் - உன்
முகத்தின் முன்னே
மூலிகையாய் ..!!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (19-Aug-14, 4:21 am)
பார்வை : 501

மேலே