வார்த்தையோடு வாழ்ந்த விழிகள் - இராஜ்குமார்

வெட்ட வெளியில்
வெக்கமின்றி
கவிதை ஒன்றையே
காதல் செய்தேன்

வாசிக்கும் வரிகளில்
உனையே யோசித்தேன் ..!!

இலைகளின் பசுமை பிடித்து
பூக்களின் வாசம் கடத்தி
எழுதுகோலில் ஏனோ அடைத்தேன் ..!!

பின் - கண் உறங்கா நேரத்தில்
கவிதைதாளில் தெளித்தேன் ..!!

வரைந்தது வரைந்து
உந்தன் கை சேர்த்தேன் ..!!

முகத்திற்கு முன்னே
முடிவை சொல்ல
முடியலையா பெண்ணே

இதோ - எந்தன்
விழியை கொஞ்சம்
வெளியே எடுத்து - உன்
பாதத்தின் பக்கம்
பத்திரமாய் வைக்கிறேன்

உன்
முடிவை கொஞ்சம்
விழியின் விளிம்போடு
பக்குவமாய் பகிர்ந்துக் கொள் ..!!

உந்தன் பாதம் - இனி
எந்தன் விழிகளை
மிதித்தாலும் சிதைத்தாலும்

அன்போடு அடிக்கடி
அரவணைப்பேன் - உன்
வார்த்தையோடு வாழ்ந்த
அவ்விழிகளை ..!!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (19-Aug-14, 4:08 am)
பார்வை : 345

மேலே