இ்து தான் காதலா

உன்னோடு பேசும் நிமிடங்ளில்
விண்ணோடு பறக்கிறேன்,
ஏனோ தெரியவில்லை...!

கண்ணோடு கருவிழி தல்லாட
உன் நினைவோடு கரைகிறேன்,
ஏனோ தெரியவில்லை!

காரணம் புரிந்தும் , தெரியவில்லை
இவைகளுக்கான முடிவு,
உன் முன் வைக்கிறேன்,,,,!

முடிவு மட்டுமல்ல,,,,,,
என் வாழ்வின்
அடுத்த நொடியையும்,,,,,?

அடி பெண்ணே!
தவறு ஏதும் செய்யாமல்
தலை குனிகிறேன்,
உன் முன்பு மட்டும்
ஏனோ தெரியவில்லை,,,,,!

என்னிடம்,
'' உறைய வைக்கும் பார்வையில்''
பக்குவமாய் பேசுகிறாய்,
எந்தவித பதற்றமும் இன்றி
ஏனோ தெரியவில்லை,,,,,,!

எனக்கு பேச தெரிந்த
அனைத்து மொழிகளையும்
மறந்து விடுகிறேன்,
உன்னிடத்தில் மட்டும்.....
ஏனோ தெரியவில்லை....!
காரணம் புரியவில்லை....!

இது தான் காதலா ???

எழுதியவர் : பாலு (19-Aug-14, 12:05 am)
பார்வை : 134

மேலே