புதிய கீதை 4---யார் நீ

புதிய கீதை 4 (யார் நீ?)

யாருக் காக மனிதாநீ வாழவேண்டும்?.
யார் வாழ மனிதாநீ ஆள வேண்டும்?.
யார் சொந்தம் எண்ணிநீ வாழ்கின்றாய்?
யார்க் கென்று சேர்க்கவும்நீ ஆள்கின்றாய்?

இரத்த சொந்தம் நம்பிநீ வாழ்ந்தாளும்.
சுற்ற பந்தம் வாழநீ ஆண்டாலும்
சொத்தென்ன பற்றென்ன கணக் கிட்டுத்தான்
சுற்றமெல்லாம் பற்றுமங்கு சுடு காடுதான்.

அன்பென்ற சொத்துதான் ஆள் சேர்க்குமே!.
அன்புக்குள் சொர்க்கமும். வாழ் வாகுமே!
சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்த மில்லையே!
பந்தமென்று உள்ளதெல்லாம் பாசம் இல்லையே!

உறவுகள் பொய்யென்றே உலகம் கண்டதே!
வரவுகள் கைகொண்டே வழி நின்றதே!
இரத்தங்கள் மொத்தமும் ஒன்றில்லையே!
ஒத்தணையும் சொந்தமும் என்றில்லையே!

நிறமென்ன தரமென்ன வகை எத்தனை?
மனிதாஉன் இடமென்ன உரை யத்தனை?
இனம் கூறும் உறவென்ன பேருமென்ன?
பிணமான பிறகென்ன நீ யாரென்ன?

அண்ணன் தம்பி அக்கா தங்கை
பின்னும் பிள்ளை பேரர் என்று
எண்ணும் உறவு எல்லாம் எங்கே?
மண்ணாகும் மனிதாஉன் சொந்தம் எங்கே??
.
உரிமையே கருமமென நீ வாழ்ந்திட்டால்
கடமையே உடமையென நீ ஆண்டிட்டால்.
மனிதமும் புனிதனாய் உன்னைப் போற்றும்.
உலகமும் இறைவனாய் தன்னில் ஏற்றும்.

உயிரெல்லாம் உன்சொந்தம் உன்னில் ஏற்றியே
உலகெல்லாம் உன்இல்லம் என்றே போற்றியே
பொதுநன்மை ஒன்றிற்கே நீ வாழ்வதே
அதுஉண்மை என்பதற்கே நீ வந்ததே!

அச்சமஞ்சும் மடைமையை போக்கி முன்னேறு.
உச்சங்கொஞ்சும் .வளமையை ஆக்கி நின்னேறு.
மச்சமென உன்னருமை நீட்டிக் காத்துமே:
எச்சமென்றும் உன்புகழை பாடி வாழ்த்துமே!

யாருமிங்கே யாருக்குமே தாழ் வென்றில்லை.
சோறுஞ்சொத்தும் சுபமென வாழ் வென்றில்லை.
நேரும் நிலைமை சதமில்லை எதுவென்றாலும்
தேறும் கடமை செயலாக பயமென்றில்லை.

வந்ததாக வரவொன்றும் பதிக்க வேண்டுமே.
வாழ்ந்ததாக அடையாளம் செதுக்க வேண்டுமே.
மனிதம்நின்று ஆண்டஉனை நினைக்க வேண்டுமே.
புனிதனென்று ஆண்டவனாய் துதிக்க வேண்டுமே.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (19-Aug-14, 8:01 am)
பார்வை : 90

மேலே