கோபம் பொறு - நாகூர் லெத்தீப்
மனிதனை
அழிக்கும்
வன்முறை
மனிதனிடத்தில்........!
போனால்
வாராது
சொன்னாலும் தீராது......!
அறிவை
விரட்டும்
பொறுமையை
துரத்தும்......!
சொல்வதை
கேட்க
மூர்க்கத்தனம்
செவிகொடுக்குமா.......!
அழிவுக்கு
யார் காரணம்
அழிவே
நீயாக இருக்க........!
நிதானம்
இல்லை முடிவில்
அவமானம்
அசிங்கம்.......!
யார் சொல்லி
யார் கேட்க
தலைகனம்
தலைகுனிவு.......!