கவிதைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் கவிதைகளை
ஒரே மூச்சில் எழத முடிகிறது.
புரட்சி கவிதைகளை
எழுதித் தொலைக்க
வேண்டியிருக்கிறது...
நிறுத்தி நிதானமாய்.
என்னில் தோன்றியது...
இன்னொருவனுக்கு
தோன்றும் போது,
என்னை விட
அழகாய் வடித்து விடுகிறான்...
கவிதை.!
பத்து கவிதையை
பாராட்டும்
மகிழ்ச்சி
வரவே இல்லை...
நூறு கவிதை
எழதிய போது.
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இல்லாதபோது...
நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
எழுதுவதே.
கவிதை.!
கவிதைகளை
விற்காதீர்.
விற்று விட்டு
எதை வாங்குவீர்.?
அதை விட
சிறந்தததாக.
ஒரு கவிதை
பார்க்கப்படாதபோது கூட
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது...
பார்க்காதவரை
மன்னித்து.
எழுதும்போது
இடையில் வரும் மனைவியை
"ச்சீ " எனச் சொல்லி
எழுதிய கவிதைகள்
அத்தனையும்..
அசிங்க கவிதைகளே.
கவிதை நோட்டில்
கிறுக்கிய
குழந்தைகளுக்காக
நீங்கள் செய்ய வேண்டியது
உங்கள் கவிதைகளை
கிழித்தெறிவதுதான்.