புதுக்கவிதை

புதுக்கவிதை
புரியாமல் இருப்பதும்
புதிராக இருப்பதும்
புதுக்கவிதை இலக்கு
எழுதியவருக்கே புரியாமல்
எண்ணங்களின் குழப்பச்
சிதறல்கள்
வாசிப்பவர் புரிந்திடார்
தலையும் வாலும் தெரியாமல்
புரியாவிட்டாலும்
“ஆஹா, ஓஹோ” என்று
பாராட்டத் தவறினால்
கற்றவராய்க் கருதப்படமாட்டார்
ஒட்டாத சொற்களையெல்லாம்
ஒட்டவைத்திருந்தாலும்
திறனாய்வாளரின் அறிவுடமை
ஒன்றுமில்லாக் கவிதையையும்
ஒப்பற்ற கவிதையாதாக்கும்
அவர் கொடுக்கும் இணைப்பால்.
T. S. Eliot 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆங்கிலக் கவிஞர். அவர் எழுதிய The Waste Land என்ற நெடுங்கவிதை நவீன காப்பியமாகக் கருதப்படுகிறது. திறனாய்வாளர்களின் கட்டுரைகளைப் படிக்காமல் அந்நெடுங்கவிதையைப் வாசிப்பவர்கள் அதை தொடர்பில்லாக் கருத்துக் குவியல், கவிதை அல்ல என்று தான் தூக்கி எறிவார்கள். e e cummings என்ற அமெரிக்கக் கவிஞரின் கவிதைகளில் (முற்று புள்ளி, அரைப்புள்ளி போன்ற punctuation குறியீடுகள் எதுவுமே இருக்காது. அதற்கு அவர் பெயர் அச்சிலிருக்கும் விதமும் அவர் கவிதைகளும் சான்று.
அவர் கவிதைகளையும் திறனாய்வாளரின் உதவியின்றி புரிந்துகொள்ளமுடியாது.