என் கணிதம்
உம் பேரு ரகுராமன் தானே?
அதிலெண்ணணே உங்களுக்குத் திடீர்னு சந்தேகம்?
இல்ல உன் சர்டிஃபிகட்லெ ராக்குராமன்னு இருக்கே.
அட போங்கண்ணே எண் கணித ஜோதிடர் எம் பேர ராக்குராமன்னு மாத்தினா ஆறு மாசத்லெ நல்ல வேல கெடைக்கும்னு சொன்னாரு. அவரு சொல்லி ரண்டு வருஷம் ஆகுது. இன்னும் வேல இல்லாம சுத்திட்டு இருக்கேன். பாக்கறவங்கெல்லாம் “பட்டிக்காடா பட்டணமா”ங்கற சிவாஜி படத்துப் பாட்டுல வரும் “அட ராக்கு, எம் மூக்கு”ன்னு என் நண்பரெல்லாம் என்னக் கிண்டல் பண்ணராங்க. எண் கணிதத்தை நம்பி என் கணிதம் இப்படி ஆயிருச்சு அண்ணே.

