மண்ணுலகம் வரும் மழைத்துளி பேசுகிறது

தெக்கோரம் வீசிய தென்றல் காத்தோ..!
வடக்கோரம் வீசிய வாடை காத்தோ..!
என் மேகத்த குளிரூட்டிப் போனது ஆத்தா..!
மழைநீரா மண்ணுலகம் காண கிளம்பிட்டேன் ஆத்தா..!
பொட்டல் காட்டில் சிந்தி வீணாப் போவேனோ..!
இல்ல சிப்பிக்குள் சிக்கி முத்தாய் ஆவேனோ..!
விவரம் ஏதும் அறியாம விண்ணுலகம் பாதி கடந்தேனே..!
மண்ணுலகம் காணும் ஆவலுல பெத்தஅப்பன் மேகத்த மறந்தேனே..!
வாரும் வழியெல்லாம் தூசு சுத்தி நிக்குதய்யா..!
மாசு மட்டைக்குள்ள சிக்கி என்பயணம் தொடருதய்யா..!
இந்த மாசு கலந்தே நாளை உன் மேல பொழிவேன்
நினைச்சுப் பாத்த- மக்கா மனசு பதறுதையா..!
என் சொந்த பந்தங்கள் எல்லாம் அழிச்சு
நிக்கியே மக்கா..!
நாளை என் தலைமுறை- உன்னை
தேடிவருமா மக்கா..!
என் மாமன்மார்கள் மரங்களை அழிச்சுபுட்ட..!
என் பூட்டன்பூட்டி குளங்களை நிரப்பிபுட்ட..!
நீ அழிச்சது இயற்கையை அல்ல இறைவன்களை..!
கட்டிடஙளுக்கு நடுவே நின்னு காத்த எதிர்பாத்த..!
தாகம் தவிச்சு நின்ன வேளையில
யாகம் நடத்தி எங்களை எதிர்பாத்த..!
இறைவனை கொன்று யாகம் நடத்தி
என்ன பயன் மக்கா..!
மரங்கள் பூமியின் ஆச்சரியக்குறிகள்
அவைகளை அள்ச்சுபுட்டு- நாளைய
தலைமுறையின் வாழ்க்கையை கேள்விக்குறி
ஆக்கிடாதே மக்கா..!

-தமிழன் “பிரபாகரன்”

எழுதியவர் : (21-Aug-14, 12:26 am)
பார்வை : 74

மேலே