நீங்களும் பங்கு பெறலாமே - பொள்ளாச்சி அபி

வணக்கம் தோழர்களே..!

வரும் 29/08/2014-அன்று மாலை 5.மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி விவேகானந்தர் மடத்தில் மேற்க்கண்ட விழா நடைபெறுகிறது.

தேசிய நலச் சிந்தனையாளர்-திரு குருமூர்த்தி
தினமலர் ஆசிரியர் திரு.ஆர்.கிருஷ்ணா மூர்த்தி,
குமுதம் ஜோதிடம் இதழ் ஆசிரியர் திரு.ஏ.எம்.ராஜகோபாலன்,
வரலாற்று ஆய்வாளர் திரு.பெ.சு.மணி
தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன்.
புதிய தலைமுறை ஆசிரியர் திரு.மாலன்.
கலைமகள் ஆசிரியர் திரு.சங்கர சுப்பிரமணியம்.
அமுதசுரபி ஆசிரியர் திரு.திருப்பூர் கிருஷ்ணன்,
விஜயபாரதம் ஆசிரியர் திரு,வீரபாகு
தி இந்து [தமிழ் ]ஆசிரியர் திரு.அரவிந்தன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சென்னையில் உள்ள மற்றும் இவ்விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நமது தோழர்களும் இதில் கலந்து கொள்ளலாமே..!

நமக்கு களம் அமைத்து தந்த இந்த எழுத்து தளத்தின் பிரதிநிதிகளாய் நீங்களும் கலந்து கொள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும்.உங்களில் ஒருவனாய் அந்த நிகழ்ச்சி மேடையில் அமர்வதற்கு எனக்கும் பெருமையளிக்கும்.!

காரணம்..இணைய வழித் தொடர்புகளுடன் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்ட சிறுகதைப் போட்டியில்,உங்கள் வாழ்த்துக்களோடு எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்து இருக்கிறது.!

தோழமைகளை எதிர்பார்த்து ...
அன்புடன் பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (21-Aug-14, 1:34 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 100

மேலே