பிறந்தநாள் வாழ்த்துகள் AK

நான் முகம் பார்க்காத..
என் முதல் தோழிக்கு...!

பிறந்தநாள் என்று அறியக்கண்டது..
கணினி மூலம் என் கண்கள்...!

எவ்வித யோசனையும் இன்றி..
என் கால்கள் சென்றது கடைவீதிக்கு..!

எதற்காக? யாருக்காக? என்று..
நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லும்போது..
தென்பட்டது அந்த பரிசு..!

அவளிடம் சென்றடையாது என் தெரிந்தும்..!

வண்ண காகிதத்திற்குள் உறங்குகிறது..
என் ஆடைபெட்டியின் ஒரு மூளைக்குள்..
அவளுக்கான பிறந்தநாள் பரிசு.!

வரிகளின் மூலம் தோழியானவளுக்கு..
வரிகளின் மூலமே என் வாழ்த்துகளை சொல்வதில்..
சற்று வருந்துகிறேன்..!

என்னை தமிழில் மூழ்கச்செய்யும்..
எத்தனையோ கவிதைகாரர்களில்..
அவளும் இன்றியமையாதவள் என்ற பெருமையோடு..


என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!!!

எழுதியவர் : சதுர்த்தி (23-Aug-14, 2:24 am)
பார்வை : 210

மேலே