காலத்தின் ஓட்டத்தில் நானும் பிரம்மாவானேன் உன்னால்

வலி! ஐய்யோ ! உயிர் போகிறதே !
உயிர் போகும் வலியா? இல்லை
உயிர் தோன்றும் வலியா ?
என நினைப்பதற்குள் - காதுகளில்
கீ ''கீ ''' உன் அழுகை குரல் விழ
என் கண்கள் நீரை உதிர்த்தன ....
என் வலி உணர்ந்து நீ அழுதாயா ? -இல்லை
உன் அழுகை கேட்டுதான் என் கண்கள்
நீரை உதிர்த்ததா ? .......தெரியவில்லை
காலத்தின் ஓட்டத்தில் நானும் பிர(அ)ம்மாவானேன் உன்னால் .............