வயலோடு விளையாடு

பச்சை மெத்தை விரிச்சிருக்கு
நீல வானம் விரிந்திருக்கு !
வரப்பில் தென்னை மரமிருக்கு
அரணாய் நீண்ட மலையிருக்கு !
மலைமேல் முகில் படுத்திருக்கு
ஆரத் தழுவி இணைஞ்சிருக்கு !
தென்றல் தீண்ட சிலிர்த்திருக்கு !
அதைக் கண்டமனம் தவிச்சிருக்கு !
இயற்கை செய்யும் காதலிலே
இதயம் உன்னையே நினைச்சிருக்கு !
விரைந்து வாடி குமரிப்பெண்ணே
விரகத்தில் துடிக்குது என்மனமே !!
( படம் - குமரி )