அன்புள்ள என் காதலுக்கு
என் நெஞ்சில் பல ஏக்கங்கள்
கதைக்க மனமின்றி அமைதியாய்
ஒரு வார்த்தை சொல்ல மனமின்றி
மௌனமாய் .......................
அன்புடன் எவராவது பேசமாட்டார்களா?
என எங்கும் தேடியும் கானாதவலாய்
தினமும் கனாக் காணும் உன் அன்புத்
தோழியாய் நான் என்றும் உனக்கு
தென்படுகிறேன்
அன்பைத்தேடும் இவ் வுலகில்
நானும் உன் நிரந்தர அன்பைத் தேடி
ஓடி உன்னைத் தேடி வருகிறேன்
முடிவில் களைத்து விடுகிறேன்
என்றாவது என் அன்பிற்கு விடை
கிடைக்காதா என ஏங்குகிறேன்
நான் .....................................................
உன் அன்பை பெற என்ன செய வேண்டுமெனக்
கூரு நான் அதை செய்கிறேன்
என்றாவது உன் பதிலும் அன்பும் கிடைக்காதா
என காத்திருக்கிறேன் நான்