காவியமும் ஓவியமும்
செவ்விதழின் வாய் திறந்து
சிரித்து வரும் அழகுடனே
செண்டாக மலராக செந்த்தூரப் பூவாக
செதுக்கி வைத்த சிலையாக
செல்வி அவள் எழிலாக
செருக்குடனேநடந்து வந்தாள்
செழியன் அவன் கைகளுக்குள்
வந்தவளும் மன்னனிடம்
வண்ணப் பூங்காவியமாய்
வரவு வைத்தாள் வடிவமதை
வல்லோனும் சான்றோனும்
வளங்கள் பல கொண்டவனும்
வண்ணப் பூங்காவியத்துள்
வரவு வைத்தான் வைரம் தன்னை
காவியங்கள் காத்து நிற்கும்
காதலித்துப் பூத்து நிற்கும்
காவியமும் ஓவியமும் காதலர்க்கே
காவியங்கள் கதையாகும் ஓவியங்கள் சிலையாகும்
காதலர்க்கே சாட்சி சொல்லும்
கதை சொல்லும் அன்புக் களஞ்சியங்கள்
காவியமும் ஓவியமும்