நமக்கு
உன்னைவிட யாரைப்புரியும் எனக்கு !
என்னைத்தவிர எவரைத்தெரியும் எனக்கு !
நாம் ஒட்டித்திரியும் நிழல்கள் அல்ல !
எட்டக்கிடக்கும் நிஜங்கள் !!
வார்த்தைகள் போதும்,
நான் உன்னை வசப்படுத்த !
பார்வைகள் போதும்,
நீ என்னை கட்டுப்படுத்த !
நாம் நிறங்களல்ல ஒட்டி மேலேபரவ !
வரங்கள் ஒருவரை ஒருவர் வாழ்விக்க !!