அழகான வாழ்கை ஆனந்தமாய்

அம்மா தேடியும் கிடைக்கவில்லை
அப்பா தொலைந்ததும் தெரியவில்லை
கவலை இருந்தும் கலங்கவில்லை
கருணை இல்லத்தின் கடவுள் பிள்ளை....

கீர்த்தனை கேட்டாயோ
பல்லவி பல போட்டு
சரளமாய் சரணம்சேர்த்து
தாளம் தாலாட்ட
நான் பாடும் மௌனராகம்
எனக்கு மட்டும் எதிரொலிக்கும்
பேசமுடியா வானம்பாடி....

சில்லென்ற சலங்கை ஒலியும்
கொஞ்சுகின்ற மழலை மொழியும்
கூவும் குயிலும் கச்சேரி நடத்தும்
காதோரம் கேட்கும் அத்தனையும்
கற்பனை கானமாய்....

மஞ்சள் மாலையும் செந்நிற சூரியனும்
மயில் தோகையும் மழை மேகமும்
பசுமை வயலும் பாயும் நதியும்
பார்த்ததில்லை ஒருநாளும்
வருத்தமில்லை எந்நாளும்
கற்பனை உலகம் காவியம் படைக்கும்
என் எண்ணங்கள் அத்தனையும்
பல வண்ணங்கள்.....

இறைவன் படைப்பில் இல்லாமை இல்லை
தேடி தவிக்க தொலைக்கவும் இல்லை
மன நிறைவில் நிறைந்து
குறைகள்குறைத்து
வாழ்க நிறைவுடன்
அழகான வாழ்கை ஆனந்தமாய்....

எழுதியவர் : vinoliya Ebinezer (22-Aug-14, 11:39 pm)
பார்வை : 180

மேலே