அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டிக்கவிதை

அழகிய வாழ்வு -அவையே
ஓர் ஆனந்தம் தான்!!
பண்புடன் கூடிய ஒழுக்கமும்
பகைமையில்லா வாழ்வும்
பழிக்கு அஞ்சா நெஞ்சமும்
பரந்து விரிந்த இவ்வுலகை
பரவசமுடன் நோக்கும் பண்பும்
பதற்றமில்லா பக்குவமும்
பிணியில்லா தேகமும்
செல்வ செருக்கில்லா செழுமையும்
மன நிறைவுடன் கூடிய மனதிருப்தியும்
பொறுப்புடன் இல்லத்தைப் பேணுதலும்
மத பேதமின்றி மனிதர்களை
மதிக்கும் மனித நேயமும்
வயது முதிர்ந்த பெற்றோரை -தன்
அன்பால் அரவணைக்கும் பிள்ளைகளும்
கடவுளின் கட்டளைக்கு கீழ்படிதலும்
கிடைக்கப் பெற்ற ஒருவரின்
வாழ்வு நிச்சயம் -ஓர்
அழகான வாழ்க்கை!
ஆனந்த வாழ்க்கையே!!