அழகான வாழ்கை ஆனந்தமாய்
வாழ்வினில் வசந்தம்
வருகின்ற பொழுதெல்லாம்
ஆனந்தமே அர்சனையாய்
அழகுள்ள வாழ்க்கையதை
அள்ளி அணைத்துவர
கொட்டித் தந்ததம்மா
கொண்டிருந்த உறவுகள்
அன்புக்கு அண்ணன்கள்
அருமையான தம்பிகள்
கேட்டவுடன் கிடைத்திடவும்
தேவையதைத் தந்திடவும்
பாசமிகு பெற்றோர்கள்
எனக்காக எனக்காக
சேர்த்திட்ட செல்வமெல்லாம்
ஊ ரெல்லாம் வாழ்த்துரைக்க
உயிலாக உரிமையுடன்
அன்புடனே வாழ்வதற்கு
ஆனந்தமாய் அன்பளிப்பாய்
அத்தனையும் கொடுத்தனரே
அழகான வாழ்க்கையினை
ஆனந்தமாய் வாழ்ந்திடவே
ஆசையுடன் மணவாளன்
ஆனந்தமாய்க் கைகோர்த்து
ஆகட்டும் மணவாழ்க்கை
ஆனந்தமே பொங்கட்டும்
ஆராரோ பாடிடவே
ஆனந்த மணவாழ்வில்
ஆசையுடன் குழந்தையை
திட்டமிட்டுத் தந்திடவே
சொல்லாமல் சொல்லியும்
அழகான வாழ்கை ஆனந்தமாய் வாழ
ஆரம்பித்தும் தந்தனரே
வாழுகின்ற வாழ்வெல்லாம்
ஆனந்தமே ஆனந்தமே
அழகான வாழ்கைஆனந்தமாய் ........